shadow

மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், ‘பார்வோ வைரஸ்’ பரவலால் வீட்டு செல்லப்பிராணிகளான நாய்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

மனிதர்களைப் கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாக்கி வரும் நிலையில் தற்போது விலங்குகளை குறிப்பாக நாய்களை பார்வோ வைரஸ் என்ற வைரஸ் தாக்கி வருவதாக கூறப்படுகிறது

இந்த வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி போடாமல் இருப்பதே என்றும், எனவே செல்லப்பிராணிகள் வைத்து இருப்பவர்கள் உடனடியாக பார்வோ வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்களுடைய செல்லப்பிராணிகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மழைக் காலங்களில் மிக வேகமாக பரவும் என்பதால் அதற்கு முன்னரே பார்வோ வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது