shadow

அஜித்-ஷங்கர் இணையும் ‘முதல்வன் 2’: வில்லன் அமீர்கான்

அஜித்தின் ‘விவேகம்’ திரைப்படம் பல நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி ரூ.150 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

அஜித்தின் அடுத்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளதாகவும், இந்த படம் அவர் இயக்கிய ‘முதல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் வில்லனாக அமீர்கான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தை லைகா அல்லது ஏ.எம்.ரத்னம் நிறுவனம் தயாரிக்கும் என்றும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் தீபாவளி தினத்தில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply