shadow

அஜித், முருகதாஸ் படங்களின் நாயகிகள் திடீர் மாற்றம்

kajalஅஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘தல57’ படத்தின் நாயகி அனுஷ்கா என்று கிட்டத்தட்ட படக்குழுவினர் உறுதி செய்த நிலையில் திடீரென அனுஷ்காவுக்கு பதிலாக காஜல் அகர்வாலை படக்குழுவினர் தற்போது ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. படக்குழுவினர் கேட்ட கால்ஷீட் தேதிகள் அனுஷ்காவிடம் இல்லாததால் இந்த மாற்றம் என்று தெரிகிறது.

விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா என இரண்டு படங்கள், சூர்யாவுடன் மாற்றான் தனுஷுடன் ‘மாரி’ கார்த்தியுடன் ‘நான் மகான் அல்ல’ போன்ற படங்களில் இணைந்து நடித்த காஜல் அகர்வால் அஜித்துடன் நடிக்க விரும்புவதாக ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவருடைய விருப்பம் தற்போது நிறைவேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் ‘வாஸ்கோடகாமா’ என்ற புதிய படத்தின் நாயகியாக ப்ரிணிதி சோப்ரா நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதற்கு முன்னர் இந்த படத்தின் நாயகியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

Leave a Reply