அஜித் பாடலை கேட்டு கண்கலங்கிய சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் நேற்று ஒரு இசை விருந்து நடைபெற்றது. இதில் முகின் பாடிய பாடல் மனதை சொக்க வைக்கும் அளவுக்கு இருந்தது. அவருடைய யூடியூப் சேனலுக்கு ஏன் மில்லியன் கணக்கானோர் வருகை தருகின்றனர் என்பது நேற்று புரிந்தது

இந்த நிலையில் சாண்டியின் மகள் லாலாவுக்கு ஒரு பாடல் பாடுவதாக இசைக்குழுவினர் அறிவித்து அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணா’ பாடலை பாடினர். இந்த பாடலை கேட்டவுடன் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய சாண்டி, முகின் கொடுத்த பொம்மையை தன் மகளாக நினைத்து கொஞ்சியது அனைவரையும் கண்கலங்க வைத்தது. குறிப்பாக மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு ஆகியோர்களின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது

மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர்ஸ் பாடகர்கள் அளித்த இசை விருந்தும் இனிமையாக இருந்தது

Leave a Reply