அஜித் படத்தில் நடிக்க முடியாது என கூறினாரா பிரசன்னா?

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தில் பிரசன்னா வில்லனாக நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வந்தது. பிரசன்னாவும் இதை மறுக்கவில்லை என்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் சற்று முன்னர் பிரசன்னா தனது டுவிட்டரில் ‘வலிமை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டதாகவும் இருப்பினும் எதிர்காலத்தில் அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

பிரசன்னாவின் இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கும் பிரசன்னா ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply