டெல்லி கணேஷுக்கு அஜித் கொடுத்த வாக்குறுதிஅஜித் நடித்து வரும் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் டெல்லி கணேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் பட்ப்பிடிப்பின் இடையே அஜித்துடன் பேசிக்கொண்டிருந்த டெல்லி கணேஷ், தான் சொந்தமாக தனது மகனுக்காக தயாரித்த திரைப்படத்தால் தனக்கு ரூ.3 கோடி நஷ்டம் என்றும், அதுகூட பரவாயில்லை, ஆனால் அந்த படத்தை வாங்ககூட விநியோகிஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை என்றும் மனவருத்தத்துடன் கூறினாராம்.

இதனைகேட்ட அஜித், டெல்லி கணேஷ் மகனை வரவழைத்து அவருக்கு பல நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை கூறியதோடு, நிச்சயம் டெல்லி கணேஷ் மகனுக்கு தனது அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாகவும், அவருடைய நடிப்பை தான் பார்த்ததாகவும், அவர் ஒரு நல்ல நடிகராக வருவார் என்றும் கூறினாராம்.

எனவே அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் டெல்லி கணேஷ் மகனுக்கு ஒரு வாய்ப்பு நிச்சயம் என்று தெரிகிறது

Leave a Reply