அஜித், தனுஷூடன் கனெக்சன் ஆகும் ஹிப் ஹாப் தமிழாவின் அடுத்த படம்

அஜித் நடித்த விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் சமீபத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்

இந்த படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இந்த இரண்டு தமிழ் படங்களையும் ஒரே நேரத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply