shadow

அஜித்தை பின்பற்றும் விஜய்சேதுபதி

அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக வெளிநாட்டு படப்பிடிப்பு என்றும் கூறப்பட்டது. இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்க்காத பல்கேரியா, ஆஸ்திரியா உள்பட பல புதுமையான லோகேஷன்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது

இந்த நிலையில் ‘விவேகம்’ படத்தை அடுத்து தற்போது விஜய்சேதுபதியின் ‘ஜூங்கா’ திரைப்படமும் பல்கேரியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதுவரை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் படப்பிடிப்பு நடந்த நிலையில் இன்று முதல் பல்கேரியாவில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கோகுல் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, சாயிஷா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Leave a Reply