shadow

அஜித்துடன் இணைகிறாரா ரங்கராஜ் பாண்டே?

தந்தி டிவியில் இருந்து சமீபத்தில் விலகிய ரங்கராஜ் பாண்டே, ரஜினி கட்சியில் சேர்ந்து அவருக்கு அரசியல் ஆலோசகராவார் என்றும் புதிய தமிழ் செய்தி சேனல் ஆரம்பிப்பார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் அவர் அஜித் நடிக்கும் அடுத்த படமான ‘தல 59’ படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நேற்று நடைபெற்ற ‘தல 59’ படத்தின் பூஜையில் அவர் கலந்து கொண்டதால் இந்த செய்தி பரவி வருகிறது. ஆனால் ரங்கராஜ் பாண்டே நடிப்பதை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை

‘தல 59’ படத்தில் பத்திரிகையாளர் கேரக்டர் ஒன்று வருவதாகவும், அந்த கேரக்டரில் ரங்கராஜ் பாண்டே நடிப்பதாகவும் கூறப்படுகிறதூ.

 

Leave a Reply