அஜித்துக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து

இன்று அஜித் பிறந்த நாளை அடுத்து அவருக்கு வாழ்த்து கூறும் ஒவ்வொருவரின் பெயரும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருவதால் பல பிரபலங்கள் அவருக்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த அடுத்த பிரபலம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:

எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று துணைமுதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்,.

Leave a Reply