அஜித்துக்கு ஏற்ற விவசாயி வேடம்: விவேக் தகவல்

அஜித்துக்கு ஏற்ற ஒரு விவசாயி வேடம் வைத்திருப்பதாகவும், அவர் சம்மதித்தால் அவரது படத்தை இயக்க தயார் என்றும் காமெடி நடிகர் விவேக் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுவரை வெளியான விவசாய படங்கள் சீரியஸ் படமாகவே வந்துள்ளதாகவும், தன்னிடம் ஒரு முழு நீள காமெடி கலந்த விவசாயம் கதை இருப்பதாகவும், இந்த படத்தில் அஜித் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றும் விவேக் அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

ஆனால் அஜித் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து அவர் பாலிவுட் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. எனவே விவேக் இயக்கத்தில் அஜித் நடிக்க சம்மதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply