அஜித்தின் ’வலிமை’ படம் வெளியாகும் தேதி குறித்த தகவல்!

தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பொருளாதார பிரச்சினை காரணமாக நின்று விட்டதாக வதந்தி கிளம்பிய போதிலும் அந்த வதந்தியை கண்டுகொள்ளாமல் படக்குழுவினர் சுறுசுறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் இந்த படம் நவம்பர் 12ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே வேதாளம் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் தீபாவளிக்கு அஜீத்தின் படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply