shadow

அஜித்தின் உலக சாதனையை முறியடிக்க விஜய் ரசிகர்களின் வித்தியாசமான முயற்சி

அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தின் வசூல் ரூ.150 கோடியையும் தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் ‘விவேகம்’ திரைப்படம் சப்தமில்லாமல் ஒரு உலக சாதனையை நெருங்கி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதாவது விவேகம்’ படத்தின் டீசருக்கு இன்னும் 17000 லைக்குகள் யூடியூபில் கிடைத்தால் அதிக லைக்குகள் பெற்ற உலகின் நம்பர் ஒன் டீசர் என்ற பெருமையை பிடித்துவிடும். முதலிடத்தில் ஸ்டார்வார்ஸ் என்ற ஹாலிவுட் படம் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இது இரண்டு நாட்களுக்கு முந்தைய நிலைமை என்ற நிலையில் தற்போது 10000 லைக்குகள் மட்டுமே ‘விவேகம்’ படத்திற்கு தேவையாக உள்ளது. இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் அதிரடியாக ஸ்டார் வார்ஸ் படத்தின் டிசருக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். இதன் மூலம் ‘விவேகம்’ படத்தின் உலகசாதனையை தடுக்கலாம் என்பது அவர்களின் எண்ணமாக இருப்பது தெரியவந்துள்ளது.

விஜய் ரசிகர்களின் இந்த வித்தியாசமான முயற்சியால் ஸ்டார் வார்ஸ் படத்திற்கு ஒரே நாளில் 1000 லைக்குகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply