shadow

அகோரி படத்தின் டீசரை வெளியிட்ட பிரபல நடிகர் !

பாரதி படத்தில் அறிமுகமாகிய சாயாஜி ஷிண்டே அதன்பின்னர் பல படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் முதல்முறையாக அகோரி வேடத்தில் நடிக்கும் படம் ‘அகோரி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீஸரை நடிகர் விஷால் இன்று வெளியிட்டுள்ளார். ஓர் அகோரிக்கும், தீய சக்திகளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் புதுமுக இயக்குனர் டி.எஸ்.ராஜ்குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். கதாநாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் மற்றும் வில்லனாக சகுல்லா மதுபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

 

Leave a Reply