shadow

ஹரிஷ் கல்யாண்-ரைசா ஜோடி சேரும் புதிய திரைப்படம்

பிக்பாஸ் பங்கேற்பாளர்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகிய இருவரும் தமிழ்ப்படம் ஒன்றில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படத்தை இளன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கிருஷ்ணா, சந்திரன் நடித்த ‘கிரகணம்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகவும், ரொமான்ஸ் படமான இந்த படத்தில் ஹரிஷ், ரைசா ஜோடி பொருத்தமாக இருப்பார்கள் என்பதால் அவர்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டார்கள் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, பிந்துமாதவி, ஜூலி, காயத்ரி, சக்தி, வையாபுரி என பலருக்கு கோலிவுட் திரையுலகிலும் தொலைக்காட்சியிலும் வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் தற்போது ஹரிஷ், ரைசாவுக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply