ஹரிஷ் கல்யாண்-ரைசாவால் பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை

பிக் பாஸ் 2 நேற்றைய நிகழ்ச்சியில் சென்ராயனின் டாய்லெட் பிரச்னை மீண்டும் தொடர்ந்தது. அதுமட்டுமின்றி நேற்று முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ரைசா, ஹரிஸ் ஆகியோர் நடித்த பியார் பிரேம காதல் பட குழுவினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர்.

நேற்று நடந்த தலைவருக்கான போட்டியில் ஐஸ்வர்யா வெற்றி பெற்று தலைவியானார். இந்த போட்டி நடந்த சில நிமிடங்களில் முடிந்தது. அதன்பின்னர் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் ரைசா, ஹரீஸ் நடித்த பியார் பிரேம காதல் பட இயக்குனருடன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். படக்குழுவினர் போட்டியாளர்களுடன் கலந்துரையாடினர்.

பியார் பிரேம காதல் பட ரைசா, ஹரீஸ் ஆகியோர் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்து கேள்வி கேட்டனர். மும்தாஜுக்கு தனி அந்தஸ்து எதிர்பார்க்கிறாரா என்ற கேள்வி கேட்டதற்கு மற்ற போட்டியாளர்கள் ஆம் என்ற கூறியதால் மீண்டும் மும்தால் பிரச்னையில் ஈடுபட்டார்.

அதே போல் ஐஸ்வர்யா, மகத் என ஓவ்வொருவரும் தங்களுக்காக கேட்கப்பட்ட கேள்விக்கு மற்ற போட்டியாளர்கள் சொல்லிய கருத்துக்காக பிரச்னையில் ஈடுபட்டனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *