ஹனிமூன் தம்பதிகளின் உல்லாசத்தை மறைந்திருந்து வீடியோ எடுத்த இளைஞர் கைது!

சீனாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஓட்டலில் தங்கும் ஹனிமூன் தம்பதிகள் மற்றும் காதலர்களை மறைந்திருந்து வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே ஓட்டலில் பணிபுரியும் இந்த இளைஞர் எந்த அறையில் யார் யார் தங்குகிறார்கள் என்பதை நன்றாக அறிந்து வைத்திருப்பவர்.

ஹனிமூன் தம்பதிகள் யார்? காதலர்கள் யார்? என்பதை அறிந்து அந்த அறையின் கதவிடுக்கும் மற்றும் கதவின் கீழ் பகுதியின் மூலம் தனது செல்போனில் தம்பதிகள் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோவை அவர் ஆபாச தளங்களுக்கு அனுப்பி பணம் சம்பாதித்துள்ளதாக தெரிகிறது. இந்த ஓட்டலில் தங்கிய காதல் ஜோடி ஒன்று இதனை கண்டுபிடித்து கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply