ஸ்ரீதேவி அம்மா மாதிரி, விக்ரம் அப்பா மாதிரி: ப்ரியா ஆனந்த்

சீயான் விக்ரம் மகன் துருவ் நடித்த ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் துருவ் விக்ரம், பனிதா சந்து, இயக்குனர் கிரிசய்யா, நடிகை ப்ரியா ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகை ப்ரியா ஆனந்த், ‘நான் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் ஸ்ரீதேவி அவர்களுடன் நடித்த போது ஒரு அம்மாவுடன் நடிப்பதாக உணர்ந்தேன். அந்த அளவுக்கு அவர் என் மீது அன்பு காட்டினார்கள். அதேபோல் ஆதித்யா வர்மா’ படத்தில் நடித்தபோது சீயான் விக்ரம் அவர்கள் ஒரு நல்ல அப்பா போன்று இருப்பதை உணர்ந்தேன்’ என்று கூறினார்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சற்றுமுன் வெளியாகி சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *