ஸ்டாலின் என்ற பெயரால் இன்னல்: கருணாநிதியை சாடுகிறாரா?

ஸ்டாலின் என்ற பெயரால் தான் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளதானகவும் எனவே குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஸ்டாலின் என பெயர் வைத்ததால் பல இன்னல்களை எதிர்கொண்டதாக முக ஸ்டாலின் ஏன் கூறினார் என நெட்டிசன்கள் விவாதம் செய்து வருகின்றனர். திமுக தலைவராக இருந்த கருணாநிதி ரஷ்யப் புரட்சியாளர் ஸ்டாலின் பெயரை தனது மகனுக்கு வைத்ததாக பெருமையாகக் கூறிக் கொண்டிருந்த நிலையில், தனக்கு ஸ்டாலின் என்ற பெயர் வைத்ததால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட முக ஸ்டாலின் கூறியிருப்பது அவரது தந்தையை அவர் சாடியுள்ளதாக கருதப்படுகிறது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

இருப்பினும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது வரவேற்கத்தக்கது என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்

Leave a Reply