வைகாசி பெருவிழா: திருச்செந்தூரில் பக்தர்கள் கொண்டாட்டம்

ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் வைகாசி பெருவிழா சிறப்பாக முருக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி பெருவிழா விமரிசையாகக் கொண்டாட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான முருகபக்தர்கள் அரோகரா என்ற கோஷத்துடன் கோவிலில் கூடினர்

பக்தர்கள் வருகை அதிகரிப்பால் பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். வைகாசியில் வரும் விசாகம் நட்சத்திரத்தில் முருகப்பெருமானின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வைகாசி விசாக திருவிழாவையொட்டி, 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது – லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *