வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறிவிட்டீர்களா? உங்களுக்கு ஒரு வாய்ப்பு

வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்ததை புதுப்பிக்கத் தவறியவர்கள் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் சலுகையை அரசு அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அதை புதுப்பிக்க வேண்டியது அவசியம். அப்படி 2011 முதல் 2016ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத் தவறியவர்கள், ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் சிறப்பு சலுகையை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த சலுகையைப் பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும், ஒரே ஒரு முறை மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு 2011 ஜனவரி 11-க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *