shadow

வேலையிழக்கும் ஐ.டி ஊழியர்கள்; மன நோய்க்கு ஆளாகும் பரிதாபம்…!

ஐடி ஊழியர்கள் வேலையிழக்கும் சூழலை அடுத்து, மன நோய்க்கு ஆளாகும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

’ஐடி தொழிலில் பணிக்கான உத்தரவாதம் இல்லை. என் குடும்பத்தை நினைத்து, நான் மிகவும் வருத்தப்படுகிறேன்’. கடந்த புதன்கிழமை அன்று, புனேவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம்.

60 வயதான முதியவர் ஒருவர், ஐடி வேலை செய்து கொண்டிருந்த தன்னுடைய மகளை நினைத்து வருத்தப்பட்டார். அவர் மருத்துவரிடம் ஆலோசனை பெறச் செல்வதை அறிந்தவுடன், வேலையிழந்ததை தெரிந்து கொண்டார்.
நடப்பாண்டில் ஐடி துறையின் மிகப்பெரிய ஜாம்பவான்களான விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா முதல் சிறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான இளம் பொறியாளர்கள் வேலையிழக்கும் அபாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் மனமுடைந்து, மன அழுத்தம், கோபம் என உணர்வு ரீதியான பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக ஆலோசனை வழங்க களமிறங்கிய ‘YourDost’ என்ற அமைப்பிற்கு, 3 நாட்களில் 260 பேர் போன் செய்துள்ளனர். 800 பேர் ஆன்லைன் சாட்டில் தீர்வு தேடியுள்ளனர். அவர்களில் 43% பேர் ஐடி துறையைச் சேர்ந்தவர்கள். அதில் அதிக அழைப்புகள் கர்நாடகா(15%), மகாராஷ்டிரா(12%), டெல்லி(11%)யில் இருந்து வந்துள்ளன.

மேலும் வடகிழக்கு, ஒடிசா, ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்தும் அழைப்புகள் சென்றுள்ளன. இதேபோல் ஏராளமான தன்னார்வ அமைப்புகள் உருவாகி வருகின்றன. ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அழைப்புகளால், அவர்களால் சமாளிக்க முடிவதில்லை. பணி உத்தரவாதம் இல்லாத ஐடி துறையில், தங்கள் நலன் காக்க யாராவது முன்வர மாட்டார்களா என்று தொழிலாளர்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.

Leave a Reply