வெள்ளை அறிக்கையும் வெள்ளரிக்காய் கூட்டும் ஸ்டாலினுக்கு தருவோம்:

தமிழக முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்தது குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முக ஸ்டாலின் எழுப்பிய இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘வெள்ளை அறிக்கை மட்டுமின்றி மஞ்சள், பச்சை அறிக்கையுடன் வெள்ளரிக்காய் கூட்டும் ஸ்டாலினுக்கு தருவோம் என்று கிண்டலுடன் பதிலளித்துள்ளார்.

முதல்வர் வெளிநாடு சென்று நேற்றுதான் திரும்பிய நிலையில் முக ஸ்டாலின் கொஞ்சம் பொறுமை காக்கலாம் என்றும் வெளிநாட்டில் இருந்து திரும்பிய அதே நாளில் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்பது சரியா? என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply