வெற்றி தரும் சப்தகன்னிமார் போற்றி

சப்தகன்னிமார்களை இந்த போற்றியைச் சொல்லி வழிபட்டால் செயல்களில் வெற்றி உண்டாகும். நிம்மதி கிடைக்கும். வீட்டில் செல்வவளம் கொழிக்கும்.

சிவாலயங்களில், பிராஹ்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்தமாதருக்கு சன்னதி இருக்கும். இவர்களை இந்த போற்றியைச் சொல்லி வழிபட்டால் செயல்களில் வெற்றி உண்டாகும். நிம்மதி கிடைக்கும். வீட்டில் செல்வவளம் கொழிக்கும்.

ஓம் பிராமியே போற்றி
ஓம் பிரம்மசக்தியே போற்றி
ஓம் அன்னவாகினியே போற்றி
ஓம் அபயகரத்தானே போற்றி
ஓம் இந்தளூர் தேவியே போற்றி
ஓம் ஈர்த்து அருள்பவனே போற்றி
ஓம் சடைமுடியாளே போற்றி
ஓம் ஜபமாலை ஏந்தியவளே போற்றி
ஓம் நான்முகியே போற்றி
ஓம் நால்வேத மாதாவே போற்றி
ஓம் பத்மாசினியே போற்றி
ஓம் பயநாசினியே போற்றி
ஓம் மலர்விழியாளே போற்றி
ஓம் மான்தோலுடையாளே போற்றி
ஓம் மாகேஸ்வரியே போற்றி
ஓம் மகேஸ்வரன் ரூபியே போற்றி
ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி
ஓம் அசுரநிக்ரகம் செய்தாய் போற்றி
ஓம் கருணாபுரத்தேவியே போற்றி
ஓம் காளை வாகினியே போற்றி
ஓம் திரிசூலதாரியே போற்றி
ஓம் திரைலோக்ய மோகினியே போற்றி
ஓம் பஞ்சமுகியே போற்றி
ஓம் பல்லாயுதம் ஏந்தியவளே போற்றி
ஓம் படர் சடையாளே போற்றி
ஓம் பாம்பணியாளே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் முக்தி நாயகியே போற்றி
ஓம் வெண்ணிற மேனியளே போற்றி
ஓம் வெற்றியளிப்பவளே போற்றி
ஓம் கவுமாரியே போற்றி
ஓம் குமாரசக்தியே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவளே போற்றி
ஓம் அசுர சம்காரியே போற்றி
ஓம் உண்மை உணர்த்துபவளே போற்றி
ஓம் உடும்ப மரத்தடி இருப்பவளே போற்றி
ஓம் கஞ்சனூர் தேவியே போற்றி
ஓம் குங்குமவல்லியே போற்றி
ஓம் சண்முகியே போற்றி
ஓம் சக்தி ஆயுததாரியே போற்றி
ஓம் மயில்வாகினியே போற்றி
ஓம் மகுடம் அணிந்தவளே போற்றி
ஓம் வீரசக்தியே போற்றி
ஓம் வசதி தருபவளே போற்றி
ஓம் வைஷ்ணவியே போற்றி
ஓம் விரிகண்ணாளே போற்றி
ஓம் கருடவாகினியே போற்றி
ஓம் கதாயுததாரியே போற்றி
ஓம் சங்கேந்தியவளே போற்றி
ஓம் சக்கரமும் ஏற்றவளே போற்றி
ஓம் சுந்தரவதனியே போற்றி
ஓம் சேந்தன்குடி தேவியே போற்றி
ஓம் பெருமுலையாளே போற்றி
ஓம் பேரழகியே போற்றி
ஓம் மகாமாயையே போற்றி
ஓம் மஞ்சள் நிற ஆடையளே போற்றி
ஓம் வனமால்தாரியே போற்றி
ஓம் விஷ்ணு அம்சதேவியே போற்றி
ஓம் வாராகியே போற்றி
ஓம் வழுவூர்த்தேவியே போற்றி
ஓம் அஸ்திர வாராகியே போற்றி
ஓம் ஆபரணதாரியே போற்றி
ஓம் கதாயுததாரியே போற்றி
ஓம் கபாலமாலை அணிந்தவளே போற்றி
ஓம் கலப்பை ஏந்தியவளே போற்றி
ஓம் கார்முகில் வண்ணியே போற்றி
ஓம் சக்திசேனாபதியே போற்றி
ஓம் ஸ்வப்ன வாராகியே போற்றி
ஓம் துஷ்டநிக்ரஹியே போற்றி
ஓம் தூப்ர வாராகியே போற்றி
ஓம் பட்டு உடுத்தவளே போற்றி
ஓம் பகை பொடிப்பவளே போற்றி
ஓம் மகிஷ வாகினியே போற்றி
ஓம் மகா வாராகியே போற்றி
ஓம் இந்திராணியே போற்றி
ஓம் இன்னல் களைபவளே போற்றி
ஓம் அங்குசதாரியே போற்றி
ஓம் ஆயிரம் கண்ணாளே போற்றி
ஓம் கஜவாகினியே போற்றி
ஓம் கதாயுதபாணியே போற்றி
ஓம் கலக்கம் தீர்ப்பவளே போற்றி
ஓம் கல்பமரத்தடியில் இருப்பவளே போற்றி
ஓம் தயாபரியே போற்றி
ஓம் தருமபுரத்தேவியே போற்றி
ஓம் யமபயநாசினியே போற்றி
ஓம் யானைக்கொடியுடையவளே போற்றி
ஓம் சாமுண்டீஸ்வரியே போற்றி
ஓம் சண்டனை அழித்தவளே போற்றி
ஓம் ஆந்தை வாகினியே போற்றி
ஓம் அஷ்டயோகினி சூழ்ந்தவளே போற்றி
ஓம் அதிகந்தரியே போற்றி
ஓம் ஆடியருள்பவளே போற்றி
ஓம் ஊர்த்துவகேசியே போற்றி
ஓம் உத்திரமாயூர தேவியே போற்றி
ஓம் கர்ஜிப்பவளே போற்றி
ஓம் கனல் ஏந்தியவளே போற்றி
ஓம் பத்மாக்ஷியே போற்றி
ஓம் பிரளயரூபியே போற்றி
ஓம் வாருணி சாமுண்டியே போற்றி
ஓம் வடவிருஷம் அமர்ந்தவளே போற்றி
ஓம் ரக்த சாமுண்டியே போற்றி
ஓம் ராட்சஷ நிக்ரஹியே போற்றி
ஓம் எழுபெருந்தேவியரே போற்றி
ஓம் எளியோரைக் காப்போரே போற்றி
ஓம் சிவாலயத்தேவியரே போற்றி
ஓம் சீக்கிரமே அருள்பவரே போற்றி
ஓம் வடதிசை நோக்குபவரே போற்றி
ஓம் வரம்யாவும் அருள்பவரே போற்றி போற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *