shadow

வெயில் நேரத்தில் நுங்கு மோர் சாப்பிடலாமா?

அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் வெயிலின் கொடுமை இன்னும் நீங்காததால் உடலை குளிர்ச்சியாக வைக்கும் உணவை எடுத்து கொள்வது அவசியம். அந்த வகையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்குமோர் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்

தேவையான பொருட்கள் :

தோல் நீக்கி பொடியாக நறுக்கிய நுங்குத் துண்டுகள் – ஒரு கப்,
கடைந்த மோர் – கால் லிட்டர்,
உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லித்தழை, தோல் சீவிய இஞ்சி – தலா சிறிதளவு,
பச்சை மிளகாய் – சிறியது ஒன்று,

செய்முறை :

இஞ்சியுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து அரைக்கவும்.

அரைத்த விழுதுடன் அதனுடன் மோர் சேர்த்து ஒரு சுற்று விடவும்.

பிறகு நுங்குத் துண்டுகள் சேர்த்து நுரை வர அடித்தெடுத்து கண்ணாடி டம்பளர்களில் ஊற்றி பரிமாறலாம்.

Leave a Reply