shadow

வெயில் காலத்திற்கு ஏற்ற கீரை மோர் செய்வது எப்படி என்று பார்ப்போமா?

வெயில் காலம் தொடங்கிவிட்டதால் இனி மோர் அனைவரும் எடுத்து கொள்ளும் ஒரு பானமாக இருக்கும். இதில் வித்தியாசமான மோர் வகையான கீரை மோர் செய்வது எப்படி என்று பார்ப்போம்

தேவையான பொருட்கள் :

முளைக் கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை கலவை – ஒரு கப்,
மோர் – ஒரு கப்,
[பாட்டி மசாலா] மிளகு தூள் – தேவையான அளவு,
உப்பு, பெருங்காயத்தூள் – தேவைக்கு.

செய்முறை :

கீரை வகைகளை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய கீரையை ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

கீரை நன்றாக ஆறியதும் கீரையுடன் மோர், உப்பு, பெருங்காயத்தூள், [பாட்டி மசாலா] மிளகு தூள் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டி பருகலாம்.

Leave a Reply