வெப் சீரிஸில் களமிறங்கும் சமந்தா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தா அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன

இணையதள தொடர்கள் என்று கூறப்படும் ‘வெப் சீரீஸ்’களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ஒரு காமெடி மற்றும் ரொமான்ஸ் வெப் சீரிஸ் ஒன்றில் சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் விரைவில் ஒளிபரப்பாகும்

ஏற்கனவே கோலிவுட் திரையுலகில் பிரசன்னா, பாபிசிம்ஹா, பரத், ரம்யாகிருஷ்ணன், ராணா உள்பட சில முன்னணி நடிகர்களே வெப் சீரிஸில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply