வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் மரணமடைந்துள்ளதாக சி.ஆர்.பி.எஃப் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவசந்திரன் ஆகியோர் வீரமரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் உடனடியாக வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், இந்த தாக்குதலுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தனக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *