வீரமரணம் அடைந்த வீரரின் உடலை தோளில் சுமந்து வந்த மத்திய அமைச்சர்

காஷ்மீரில் நேற்று சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்தை மனித வெடிகுண்டு மூலம் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த நிலையில் பலரது உடல் அடையாளம் தெரியாதபடி சிதறி இருந்ததால் உடலை அடையாளம் கண்டுபிடிக்க மருத்துவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் அடையாளம் காணப்பட்ட ஒரு வீரரின் உடலை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சுமந்து வந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதல் குறித்து கூறிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் எனக் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *