shadow

வீட்டுக் கடன் வட்டி குறைப்பு எப்போது?

4பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்துள்ளது. முன்னதாக பொதுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் குறைத்தது. இதன் மூலம் விழாக்காலச் சலுகைத் திட்டத்துக்கான வட்டி வகிதம் 9.1 சதவீதமாகவும் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 9.15 சதவீதமாகவும் வட்டி விகிதம் குறைந்தது. இது கடந்த ஆறு வருடங்களில் எஸ்பிஐயின் குறைந்த வட்டி விகிதம் இதுவே. இதைத் தொடர்ந்து தனியார் வங்கியான ஐசிஐசிஐயும் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் குறைத்துள்ளது.

ஒரே நாளில் ரூ.300 கோடி வீடு விற்பனை

இந்தியாவின் முக்கியமான வீட்டு வசதி நிறுவனமான காத்ரேஜ் ப்ராபர்டீஸ் ஒரே நாளில் ரூ.300 கோடி மதிப்பிலான வில்லாக்களை விற்றுப் புதிய சாதனை படைத்துள்ளது. நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் புதிய வீட்டு வசதித் திட்டத்தை காத்ரேஜ் தொடங்கியுள்ளது. நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் திட்டம் நொய்டாவில் காத்ரெஜ் நிறுவனத்தின் முதல் திட்டமாகும்.

ரியல் எஸ்டேட்டில் டி.எல்.எஃப்க்கு முதலிடம்

ரியல் எஸ்டேட் துறையில் சிறந்து வழங்கும் நிறுவனங்கள் குறித்து இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குர்காவ்னைச் சேர்ந்த டி.எல்.எஃப். நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. ப்ளூபைட்ஸ் நிறுவனம் டி.ஆர்.ஏ. ரிசர்ச் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் அடுத்த இரு இடங்களை காத்ரேஜ் ப்ராபர்டீஸ் மற்றும் லோதா குரூப் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. ஹிரானந்தனி நான்காம் இடத்தையும் டாடா ஹவுசிங் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன. மேலும் இந்தியாவில் 57 முக்கியமான ரியல் எஸ்டேட் நிறுவனங்களை இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. இவற்றில் மும்பைச் சேர்ந்த 28 நிறுவனங்களும், டெல்லியைச் சேர்ந்த 14 நிறுவனங்களும் பெங்களூருவைச் சேர்ந்த 10 நிறுவனங்களும் புனேயைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களும் சென்னை ஹைதராபாதைச் சேர்ந்த தலா ஒரு நிறுவனமும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply