வீட்டுக்காவலில் இருக்கும் பரூக் அப்துல்லா மதிமுக மாநாட்டில் கலந்து கொள்வாரா?

வரும் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் விழா மதிமுக சார்ப்பில் கொண்டாடவுள்ளது. சென்னை – நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் மதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் குவிந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது: இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி அண்ணாவின் பிறந்த நாள் விழாவை மிகவும் சிறப்பாக முழு நாள் மாநாடாக நடத்த உள்ளோம். மதிமுகவின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையப் போகிறது. இந்த கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் அமர்வதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட உள்ளது. 75,000 பேருக்கு பகலில் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்க உள்ளோம். தொண்டர்களை பணம் கொடுத்து அழைத்து வரப்போவதில்லை. பிரியாணி வழங்கப்படாது

இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு பரூக் அப்துல்லாவை அழைத்துள்ளேன். அவர் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 4ம் தேதி இரவு என்னிடம் பரூக் என்னிடம் பேசினார். . 5ம் தேதி காஷ்மீரை சிதைத்து விட்டார்கள். இந்த சமயத்தில் பரூக் அப்துல்லாவை தொடர்பு கொள்ள இயலவில்லை.. அவரை வீட்டுக் காவலில் மத்திய அரசு வைத்துள்ளது.பரூக் அப்துல்லாவை எங்கள் மாநாட்டுக்கு முன்னதாக மத்திய அரசு வெளியேற்றாவிட்டால் பரூக் அப்துல்லாவுடன் தொடர்பு கொண்டு அடிப்படை உரிமையை வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடச்செயவேன். இதன் மூலம் பரூக் அப்துல்லாவை எப்படியாவது அழைத்துவருவேன். அந்த மாநாட்டின் கதாநாயகனாக பரூக் அப்துல்லா திகழ்வார். திமுக தலைவர் முக ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார்”

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *