வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்… எப்படி?

குடும்பப் பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட பெரும்பாலும் கலை, ஓவியம் போன்ற கைவேலைப்பாடுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் பங்குச் சந்தையில் அவர்கள் நம்பிக்கையுடன் களம் இறங்கி, முதலீடு செய்து, நிறைவாகச் சம்பாதிப்பதற்கான உத்திகளைக் கூறுகிறார், சென்னைச் சேர்ந்த நிதி ஆலோசகர் அனிதா பட்!

பெண்

* ”நீங்கள் டிகிரி முடிந்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆங்கில அறிவும், இணையத்தில் ஒரு விஷயத்தைத் தேடவும் தெரிந்திருந்தால் போதும்.

* பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன், அதன் அடிப்படைகளைத் தெரிந்துக்கொள்வதற்கு என சில ப்ரோக்கிங் பயிற்சி மையங்கள் இருக்கின்றன. அதில் சேர்ந்து, பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.

* பங்குச் சந்தையில் இறங்குவதற்கு முன், ஒரு மாத காலத்துக்கு அருகில் இருக்கும் ‘Stock Broking Centre’ சென்று பங்குச் சந்தையில் நடக்கும் விஷயங்களை நேரடியாகப் பார்த்து அறிந்துகொள்ளலாம்.

* இத்தகைய மையங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, பல வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் சென்டர்களையே அணுகவும். ஷேர் மார்கெட்மேலும், நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது, பங்குத் தரகர் கொண்டுதான் செய்யமுடியும். நம்பகமான பங்குத் தரகராக, பலகட்ட பரிசீலனைக்குப் பிறகு தேர்ந்தெடுக்கவும்.

* எஸ்.எம்.சி க்ளோபல் (SMC Global), ஷேர்கான் (Sharekhan), ரிலிகேர் (Religare) போன்ற ப்ரோக்கிங் மையங்கள் பரிந்துரைக்கு உரியவை.

* ஆரம்ப காலத்தில், குறைந்த தொகையையே முதலீடு செய்யுங்கள். உதாரணமாக, 1000 ரூபாயில் இருந்து துவங்கலாம்.

* பங்குகள் வாங்கும்போதும் சரி, விற்கும்போதும் சரி… அது குறித்த தகவல்கள் உங்களின் மின்னஞ்சலுக்கோ அலைபேசி எண்ணிற்கோ வரும்படி பார்த்துக்கொள்ளவும். இதன் மூலம், உங்களின் பங்கு விபரங்கள் பற்றின தகவல்கள் அனைத்தையும் எப்போது வேண்டுமானாலும் சரிப்பார்த்துக்கொள்ளலாம்.
* மேலும், இவ்வாறு செய்வதன் மூலம், பங்குத் தரகர்கள், உங்களின் பங்குகளை உங்களுக்குத் தெரியாமல் விற்பதைத் தவிர்க்கலாம்.

*பங்குச்சந்தை மூதலீட்டில் Day Trading, Short Term Trading, Medium Term Trading, Long Term Trading என பல வகைகள் உள்ளன. இதில், Day Trading எனப்படும் ஒரே நாளில் பங்குகள் வாங்கி, விற்கப்படும் முறையை ஆரம்ப காலகட்டத்தில் முயற்சிக்கவேண்டாம்.

* Long Term Trading எனப்படும், சில மாதங்கள் முதல் பல வருடங்கள் நிலைக்கும் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

* நாம் எல்லோரும் பணத்திற்காகதான் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறோம். ஆனால், ‘ஒரு ரூபாய்கூட இழக்கமாட்டேன்’ என பணத்தையே குறிக்கோளாக வைத்திருக்கக்கூடாது. நீங்கள் 1000 ரூபாய் இழந்தால், அதற்கான காரணத்தை ஆராய்ந்து, அடுத்தமுறை கவனமாக முதலீடு செய்யவேண்டும். உடனே லாபம் பார்க்கும் அவசர குணம் வேண்டாம்.

* பங்குச் சந்தையில், பங்குகளின் மதிப்பு ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக செய்திகள், இயற்கை பேரிடர்கள், அரசியல் நடப்புகள், சமூக மாற்றங்கள், வணிக நிலவரம் குறித்து பிரபலமான முதலீட்டாளர்களின் கருத்துகள் போன்றவை பங்குகளின் மதிப்பு கூடுவதற்கும் குறைவதற்கும் அடிப்படைக் காரணங்கள். ஆனாலும், இதை மட்டுமே நம்பமுடியாது.

* ஒரு குறிப்பிட்ட கால இடைவேளையில், உங்களின் முதலீடு மற்றும் பங்குகள் குறித்து நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *