வீடு வாங்க போறீங்களா? கண்காட்சிக்கு வாருங்கள்

திஇந்து பிராபர்டி பிளஸ் & சொந்த வீடு இணைந்து நடத்தும் ட்ரீம் பிராபர்டீஸ் வீட்டுக் கண்காட்சி (The Hindu Property Plus & Sontha veedu – Dream Properties 2017) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் டிசம்பர் 2, 3 ஆகிய இரு தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள் தங்கள் வீட்டுத் திட்டங்களை இதில் காட்சிப்படுத்தவுள்ளன. மலிவு விலை வீடுகளிலிருந்து சொகுசு வீடுகள், வில்லாக்கள் எனப் பலதரப்பட்ட வீடுகளை வாங்க இந்தக் கண்காட்சி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். இதனால் வீடு வாங்குபவர்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் வீடுகளைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கலாம்.

மேலும் வீட்டுக் கடன் தரும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்தக் கண்காட்சியில் பங்குகொள்ள இருக்கின்றன. இதனால் வீடு வாங்க விருப்பம் உள்ளவர்களுக்கு ஒரு முழுமையான சேவையை இந்தக் கண்காட்சி ஏற்படுத்தித் தருகிறது.

முதல் முறையாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. இதில் கலந்துகொள்ளும் கட்டுநர்கள் மற்றும் புரமோட்டர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி வீடு குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பும் இந்தக் கண்காட்சியில் உண்டு.

சொந்த வீட்டுக் கனவு உள்ளவர்களின் கனவை இந்த வீட்டுக் கண்காட்சி நனவாக்கும். இந்த வீட்டுக் கண்காட்சிக்கு அனுமதி முற்றிலும் இலவசம். கட்டுமான நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்திக்க இது சிறந்த வாய்ப்பாக அமையும்.

வணிகத் தொடர்புகளுக்கு: 98412 73713, 98418 10070

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *