வீடு தேடி வரும் வங்கிச்சேவை: தபால் நிலையத்தின் புதிய முயற்சி

தபால் துறை மூலம் தொடங்கப்படும் இந்த இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ்வங்கியில் சார்பில் தமிழகத்தில் முதல்கட்டமாக 37 கிளைகள் திறக்கப்பட உள்ளன. இந்த வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு வைப்புத் தொகை, அறிமுக நபர் மற்றும் ஆவணங்கள் தேவை இல்லை. ஆதார் அட்டை இருந்தால் மட்டும் போதுமானது.

வங்கியில் கணக்கு தொடங்க, மொபைல் ஆப் மூலம் தொடர்பு கொண்டால், ஏற்கனவே அறிமுகமான தபால்காரர், அழைத்தவரின் முகவரிக்கு வந்து கணக்கை தொடங்க உதவி செய்வார். பின்னர் பணம் போட வேண்டும் அல்லது எடுக்க வேண்டும் என்றால், முந்தைய நாளில் அது தொடர்பான தகவலை இணையதளம் அல்லது ஆப் மூலம் தெரிவித்துவிட வேண்டும். அதைப் பார்த்து தபால்காரர், அந்த வாடிக்கையாளர் கேட்ட தொகையை கொண்டு வந்து தந்து விடுவார்.

சேமிப்புக் கணக்கு என்றால் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் , நடப்புக் கணக்கு என்றால் 20 ஆயிரம் ரூபாயும் எடுத்துக்கொள்ள அல்லது செலுத்த முடியும். தபால் நிலையங்களில் இந்த வங்கிக்கென்று தனி கவுண்ட்டர்கள் இருக்கும். மற்ற வங்கிகளை போல், நெட் பேங்கிங், செல்போன் வங்கிச் சேவை, எஸ்.எம்.எஸ், மிஸ்ட் கால் உள்ளிட்ட வசதிகள் வரும் 1-ம் தேதி தொடங்கப்பட உள்ள இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியிலும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *