shadow

‘விஸ்வாசம்’ படத்தின் கண்ணான கண்ணே’ பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு

தல அஜித், நயன்தாரா நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் சமீபத்தில் தணிக்கை சென்று ‘யூ’ சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற மெலடி பாடலான ‘கண்ணான கண்ணே’ என்ற பாடலின் லிரிக் வீடியோ இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த பாடல் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்த நிலையில் முதல்முறையாக நயன்தாராவின் வீடியோ காட்சிகளை இந்த பாடலின் லிரிக் வீடியோவில் காண வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *