‘விஸ்வாசம்’ கெட்டப்பில் இருந்து வெளியே வந்தார் அஜித்

தல அஜித் நடித்து வந்த ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த சில மாதங்களாக பெரிய மீசை மற்றும் தாடி கெட்டப்பில் இருந்த அஜித் நேற்று நள்ளிரவு முதல் தனது இயல்பான தோற்றத்திற்கு மாறினார். இதில் இருந்து அவர் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி தனது டுவிட்டரில் ‘அனைவரின் ஆசிகளுடன் வாழ்த்துக்களுடன் இனிதே வெற்றிகரமாக விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவடைந்தது’ என்று டுவீட் செய்துள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்பது 100% உறுதியாகியுள்ளது.

வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல்முதலாக டி.இமான், அஜித் நடித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *