shadow

விஸ்வரூபம் 2′ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கமல்-ஆண்ட்ரியா


கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் அதற்கு அடுத்த ஆண்டே இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று கூறப்பட்டது.

ஆனால் பல்வேறு காரணங்களால் ஒத்திபோடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை கமல் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியப்போது, ”விஸ்வரூபம் 2′ மற்றும் ‘விஸ்வரூப் 2’ என தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளுக்கான இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் இருக்கும் ஒரே பெண் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையமான சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நானும் எனது படக்குழுவினர்களும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளோம். இந்த பெருமைக்குரிய இடத்தில் படப்பிடிப்பு நடத்துவதில் பெருமையடைகிறோம். பெண்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன், குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த எனது பாரதத் தாய்க்கு. மா துஜே சலாம்’ என்று கமல் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த படத்தின் புதிய ஸ்டில்களையும் அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்

Leave a Reply