shadow

 கிடைக்கவிருக்கும் விருந்து!

விஷால் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான ’சக்ரா படத்தை எம்எஸ் ஆனந்தன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் ’சக்ரா’ படத்தின் ஆச்சரியமான அறிவிப்பு ஜூன் 22ம் தேதி திங்கட்கிழமை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜூன் 22ஆம் தேதி விஷால் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

விஷாலின் விஷால் பிலிம்ஸ் பேக்டரி தயாரித்திருக்கும் இந்த படத்தில் விஷால், ரெஜினா, ஷ்ராதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *