விஷாலை அடுத்து விஜய்க்கு வில்லனாகும் அர்ஜூன்?

விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த ஆக்சன்கிங் அர்ஜூன், தற்போது விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

விஜய் நடிக்கும் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் ராஷிகண்ணா மற்றும் ராஷ்மிகா மந்தனா நாயகிகளாக நடிக்கவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் நடிக்க ஆக்சன் கிங் அர்ஜூனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அனேகமாக அர்ஜூன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்-அர்ஜூன் ஆக்சன் காட்சிகள் ஹாலிவுட் லெவலில் எடுக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply