shadow

விஷாலின் வேட்பு மனு மறுபரிசீலனையா? பரபரப்பு தகவல்

சென்னை ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. அவரை முன்மொழிந்த இருவர் தாங்கள் முன்மொழிந்து கையெழுத்திடவில்லை என்று கூறியதால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக விஷாலை முன்மொழிந்த 2 நபர்களும் இன்று மாலை 3 மணிக்குள் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளித்தால் விஷாலின் வேட்புமனு மறுபரீசிலனை செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இன்று மாலை ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலின் இறுதிப்பட்டியல் வெளியாகவுள்ளதால் அதற்குள் ஏதாவது திடுக் திருப்பம் ஏற்பட்டு விஷால் மனு ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply