விவேகானந்தரையும் தாக்குவார்கள் இந்தியர்கள்: சசிதரூர் சர்ச்சை கருத்து

சுவாமி விவேகானந்தர் இன்று இருந்திருந்தால் அவரையும் இந்தியர்கள் தாக்கியிருப்பார்கள் என்று சுவாமி அக்னிவேஷ் போல குண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து காங்கிரஸ் பிரமுகர் சசிதரூர் கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கடந்த மாதம் ஜார்க்கண்ட்டில் சுவாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டது குறித்துப் பேசினார். அப்போது அவர் கூறிதாவது: சுவாமி விவேகானந்தர் இன்று இந்தியாவில் இருந்திருந்தால், சுவாமி அக்னிவேஷ் போல அவரும் குண்டர்களால் தாக்கப்பட்டிருப்பார். அவர் முகத்திலும் எஞ்ஜின் ஆயில் ஊற்றி தெருவில் கீழே தள்ளி அடித்திருப்பார்கள். ஏனென்றால், சுவாமி விவேகானந்தர் மக்களை மதிக்க வேண்டும் என்றும் மனிதநேயம் தான் முக்கியம் என்று கூறியவர். அதனால், சுவாமி அகினிவேஷ் தாக்கப்பட்டது போல, சுவாமி விவேகானந்தரும் தாக்கப்பட்டிருப்பார் என்று தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாகவே பாஜகவை கடுமையாக தாக்கி வரும் சசிதரூர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரும் 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியா இந்து பாகிஸ்தானாகிவிடும் என்று விமர்சனம் செய்தார். மேலும், இவர்கள் வருகிற தேர்தலில் வெற்றி பெற்றால் இந்திய அரசியல் அமைப்பை அழித்துவிட்டு புதிய ஒன்றை எழுதுவார்கள் என்று சசி தரூர் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *