shadow

‘விவேகம்’ படத்தை பாராட்டிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்

அஜித்தின் விவேகம்’ படத்திற்கு ஒருசில பெய்டு விமர்சகர்கள் தவிர அனைத்து தரப்பினர்களிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த நிலையில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய்தத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சஞ்சய்தத் கூறியதாவது: அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டிரைலரை பார்த்தேன். இந்த படம் உருவான விதம் குறித்து என்னால் நம்பவே முடியவில்லை

மேலும் தமிழ், தெலுங்கு திரையுலகினர்கள் சினிமா உருவாக்கும் விதம் குறித்து நாம் இன்னும் சிந்திக்கவே இல்லை என்றும் குறிப்பாக பாகுபலி 2′ படத்தின் உருவாக்கம் மிக அருமை என்று கூறிய சஞ்சய்தத், இதுமாதிரியான திரைப்படங்கள் பாலிவுட்டிலும் உருவாக வேண்டும் இவ்வாறு சஞ்சய்தத் தெரிவித்தார்.

Leave a Reply