shadow

விவாகரத்து செய்ய ஆறு மாதங்கள் காத்திருக்க தேவையில்லை. உச்சநீதிமன்றம் அதிரடி

தம்பதிகள் ஒருவருக்கொருவர் மனமுவந்து விவாகரத்து செய்ய முன்வந்தால் அவர்கள் விவாகரத்து பெற ஆறு மாதங்கள் காத்திருக்க தேவையில்லை என வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பொதுவாக கருத்துவேறுபாடு காரணமாக விவகாரத்து பெறுவதற்கு தம்பதிகள் ஆறுமாத காலம் காத்திருக்க வேண்டும். ஆனால் இருதரப்பிலும் மனமுவந்து விவாகரத்து கோர விரும்பும் தம்பதிகளுக்கு இந்த விதிமுறை தளர்த்தலாம் என்றும், அவர்களுடைய மனுக்களை பரிசீலனை செய்து ஒரு வாரத்தில் விவாகரத்து மனுவை பரிசீலிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

விவாகரத்து பெறுபவர்களின் மறுவாழ்வை கணக்கில் கொண்டு இந்த ஆறுமாதகால காத்திருப்பை நீதிமன்றங்கள் ரத்து செய்யலாம் என்று மேலும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply