shadow

வில்லனுக்கு குரல் கொடுத்தார் தனுஷ்

தனுஷ் தற்போது வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படத்தில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் கவுதம் மேனன் இயக்கி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை முடிக்கவுள்ளார்.

மேலும் தனுஷின் ‘மாரி 2’ படம் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் தனது நெருங்கிய நண்பரும் ‘மாரி’ படத்தின் வில்லனுமான விஜய்ஜேசுதாஸ் நடித்து வரும் ‘படைவீரன்’ என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளர்.

லோக்கல் சரக்கா ஃபாரின் சரக்கா’ என்ற இந்த பாடலை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா கம்போஸ் செய்ய தனுஷ் பாடினார். இந்த பாடல் நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply