விரைவில் முன்பதிவு செய்யப்படும் ஏத்தர் எனர்ஜியின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

பெங்களூருவை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுதகளை ஜூன் மாதம் துவங்குவதாக அறிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ப்ரோடோடைப் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2017-ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்மயம் முன்பதிவு சார்ந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக பெங்களூருவில் விற்பனை செய்யப்பட இருக்கும் ஏத்தர் S340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த ஆண்டு இறுதியில் மற்ற நகரங்களிலும் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

புதிய ஏத்தர் S340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, நேவிகேஷன் அசிஸ்ட், பார்க்கிங் அசிஸ்ட், சார்ஜிங் பாயின்ட் டிராக்கர், எல்இடி லைட்டிங், சிபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.

புதிய ஸ்கூட்டரில் எடை கொண்ட லித்தியம் அயன் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏத்தர் S340 ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 72 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கார்களுக்கான சார்ஜிங் பாயின்ட்களை பெங்களூருவில் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த சார்ஜிங் போர்ட்கள் மே மாதம் முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *