விரைவில் பிக்பாஸ் அடுத்த் சீசன்: தொகுத்து வழங்கும் சூப்பர் ஸ்டார்

பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் மலையாளத்தில் விரைவில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை முதல் சீசனை தொகுத்து வழங்கிய மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான விளம்பரங்கள் தற்போதே ஆசியாநெட் டிவியில் வரத்தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் மலையாளம் 1 சீசனில் கவின் – லாஸ்லியா போலவே பிக்பாஸ் வீட்டின் உள்ளே ஒருவரை ஒருவர் காதலித்து வெளியே வந்தவுடன் திருமணம் செய்து தற்போது அந்த ஜோடி தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *