shadow

விரைவில் இந்தியா வரும் சியோமி போகோபோன் ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் போகோ பிரான்டு இந்தியாவில் புதிய டீசரை வெளியிட்டுள்ளது. போகோபோன் எஃப்1 ஸ்மார்ட்போன் முதலில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், சியோமி இந்தியாவின் ஜெய் மணி, புதிய திட்டத்தில் பணியாற்றி வருவதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒப்போ நிறுவனத்தின் ரியல்மி சியோமிக்கு போட்டியாக துவங்கப்பட்டுள்ள நிலையில், சியோமியின் புதிய போகோ துவங்கப்படுவதாக கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் போகோபோன் என டீஸ் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் போகோ என டீஸ் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை போகோபோன் எஃப்1 மாடலில் 6.0 இன்ச் 19:9 ரக டிஸ்ப்ளே, நாட்ச் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், லிக்விட் கூலிங் வசதி, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, டூயல் பிரைமரி கேமரா, ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக், பின்புறைம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

சியோமி போகோபோன் எஃப்1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இஷ வைபை, ப்லூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

சியோமி போகோபோன் எஃப்1 ஸ்மார்ட்போனின் டீசர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் வெளியீடு மற்றும் இதர விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply