விமானத்தை திருடி ஓட்டி சென்றவர் விபத்தில் பரிதாப மரணம்

நம்மூரில் டூவிலர், கார் ஆகியவற்றைத்தான் திருடும் வழக்கம் உண்டு. ஆனால் அமெரிக்காவில் ஒரு மர்ம நபர் விமானத்தை திருடி, அந்த விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் மரணம் அடைந்தார்

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் ஹாரிஸன் பயணிகள் விமானம் ஒன்று நின்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தின் பழுதுநீக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென பழுது பார்த்த ஒரு நபர் விமானத்தை ஸ்டார்ட் செய்து மேலே எழுப்பினார். இதனால் விமான நிறுவனத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த விமானத்தை இரண்டு போர் விமானங்கள் பின் தொடர்ந்து சென்றது. இந்த நிலையில் கெட்ரான் தீவில் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற ஊழியர் பலி ஆனார்.

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்ப்பு போல் இன்னொரு பயங்கரவாத சம்பவமாக இருக்குமோ என்று எண்ணிய நிலையில் இந்த சம்பவம் பயங்கரவாத சம்பவம் அல்ல என்றும், விமானத்தை ஓட்டிச் சென்றவர் 29 வயதான உள்ளூர் நபர் என்றும், அவர் முட்டாள்தனமாக அந்த விமானத்தை ஓட்டிச்சென்று பயங்கரமான முடிவை சந்தித்து உள்ளதாகவும், இந்த சம்பவம் பற்றி பியர்ஸ் கவுண்டி ஷெரீப் பால் பாஸ்டர் நிருபர்களிடம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *