விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயல்பட்டாரா வாஜ்பாய்? ரணில் பேட்டியால் பரபரப்பு

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது எங்களுக்கு உதவி செய்தவர் வாஜ்பாய் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ரணில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இலங்கையின் பிரதமராக நான் இருந்த சமயம் விடுதலை புலிகள் மிகவும் பலம் பொருந்தியவர்களாக இருந்தனர். அப்போது, இலங்கையின் பொருளாதரம் மிகவும் பலவீனமாக இருந்தது.

எனினும், இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி மீட்டெடுக்கவும், நீட்டிக்கப்பட்ட ராணுவ பயிற்சி அளிக்கவும் வாஜ்பாய் மிகவும் உதவிகரமாக இருந்தார். விடுதலை புலிகளின் கடற்பிரிவான கடற்புலிகளை இலங்கை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடிந்தற்கு வாஜ்பாய் செய்த உதவிகள் தான் முக்கிய காரணம்.

கடந்த 1977-ம் ஆண்டில் வாஜ்பாய் இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்த நேரம் நானும் இலங்கை வெளியுறவுத் துறை மந்திரியாக பதவி வகித்தேன்.

அப்போது அவருடன் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது, பிறகு வாஜ்பாய் பிரதமர் ஆனதும் அவரது தனிப்பட்ட செல்போன் நம்பரை எனக்கு அளித்ததால் அவருடனான எனது நட்பு தொடர்ந்து நீடித்தது.

இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே தனது பேட்டியில் கூறியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *