அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த அறிவிப்பை அடுத்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது

அமைச்சர்கள் ஒரு சிலர் இந்த பேச்சுவார்த்தையில் மாறி மாறி ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி இன்று அதிகாலை வரை பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது

ஓபிஎஸ் தரப்பிற்கு அதிக அதிகாரம் கொடுக்க ஈபிஎஸ் தரப்பு மறுத்து வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் பதவி மற்றும் மகனுக்கு மத்திய மந்திரி பதவி ஆகியவை கொடுத்தால் மட்டுமே தான் முதல்வர் வேட்பாளரை விட்டுக்கொடுக்க சம்பாதிக்க முடியும் என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்படுவதாக தெரிகிறது

இந்த குழப்பங்கள் காரணமாக இன்று முதல் வேட்பாளர் அறிவிப்பு வெளிவருமா? அல்லது ஒத்தி போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 

Leave a Reply